பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில், 3,645 பேருக்கு கொரோனா, 1,000த்தை நெருங்கி விட்டது உயிரிழப்பு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
சென்னை; தமிழகத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவில் நேற்று, 3,645 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மாநிலம் முழுதும், 74 ஆயிரத்து, 622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; உயிரிழப்பு, 1,000த்தை நெருங்குகிறது.இது குறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில், 89 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. அவற்றில்

சென்னை; தமிழகத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவில் நேற்று, 3,645 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மாநிலம் முழுதும், 74 ஆயிரத்து, 622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; உயிரிழப்பு, 1,000த்தை நெருங்குகிறது.

இது குறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில், 89 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. அவற்றில் நேற்று, 33 ஆயிரத்து, 675 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில், 3,645 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அதில், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், 122 பேர். சென்னையில், 1,956 பேர்; செங்கல்பட்டில், 232 பேர்; மதுரையில், 190 பேர்; திருவள்ளூரில், 177 பேர்; வேலுாரில், 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு கண்டறியப்பட்டு வந்த கோவையில், 41 பேர்; சேலத்தில், 111 பேர்; தேனியில், 41 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெரம்பலுார் மாவட்டத்தை தவிர்த்து, அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை, 10.43 லட்சம் பரிசோதனையில், 74 ஆயிரத்து, 622 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும், 49 ஆயிரத்து, 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.செங்கல்பட்டில், 4,651 பேர்; காஞ்சிபுரத்தில், 1,580 பேர்; மதுரையில், 1,477 பேர்; திருவள்ளூரில், 3,277 பேர்; திருவண்ணாமலையில், 1,498 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

வேலுார், கடலுார் மாவட்டங்களில், பாதிப்பு, 1,000த்தை நெருங்கி வருகிறது. மற்ற மாவட்டங்களில், 1,000த்துக்கும் குறைவாகவே உள்ளது.நேற்று, 1,358 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.மொத்தம், 41 ஆயிரத்து, 357 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 32 ஆயிரத்து, 305 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.46 பேர் பலிசில தினங்களில் இறந்தவர்களில், 46 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனாவால் இதுவரை, 957 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்ச மாக சென்னையில், 730 பேர்; செங்கல்பட்டில், 68 பேர்; காஞ்சிபுரத்தில், 18 பேர்; மதுரையில், 13 பேர்; திருவள்ளூரில், 55 பேர்; விழுப்புரம், 12 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்மாவட்டம் பாதிப்பு குணம் அடைந்தோர் இறப்புஅரியலுார் 454 391 0செங்கல்பட்டு 4,651 2,463 68சென்னை 49,690 28,823 730கோவை 393 176 1கடலுார் 929 535 5தர்மபுரி 53 19 0திண்டுக்கல் 344 231 4ஈரோடு 100 74 2கள்ளக்குறிச்சி 527 325 1காஞ்சிபுரம் 1,580 733 18கன்னியாகுமரி 275 121 1கரூர் 135 98 0கிருஷ்ணகிரி 87 32 2மதுரை 1,477 520 13நாகை 209 82 0நாமக்கல் 97 86 1நீலகிரி 56 21 0பெரம்பலுார் 165 147 0புதுக்கோட்டை 112 40 2ராமநாதபுரம் 546 162 4ராணிப்பேட்டை 620 318 2சேலம் 599 229 2சிவகங்கை 130 71 1தென்காசி 294 111 0தஞ்சாவூர் 382 156 1தேனி 447 143 2திருப்பத்துார் 100 44 0திருவள்ளூர் 3,277 1,923 55திருவண்ணாமலை 1,498 573 9திருவாரூர் 295 131 0துாத்துக்குடி 789 513 4திருநெல்வேலி 710 490 5திருப்பூர் 141 117 0திருச்சி 493 234 4வேலுார் 901 214 3விழுப்புரம் 712 434 12விருதுநகர் 314 158 4வெளிநாட்டில் இருந்து வந்தோர் 350 138 1உள்நாட்டு விமான பயணியர் 258 72 0ரயிலில் பயணியர் 402 209 0மொத்தம் 74,622 41,357 957ஸ்டான்லியில்23 பேர் பாதிப்பு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், பயிற்சி டாக்டர்கள், 13 பேர்; நர்ஸ்கள், 10 பேர் என, 23 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதையடுத்து, அவர்களை தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், அவர்களுடன் பணியாற்றிய சிலருக்கு அறிகுறி இருப்பதால், அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X