கள்ள நோட்டு அச்சடிப்பு திருப்பூரில் 4 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ள நோட்டு அச்சடிப்பு திருப்பூரில் 4 பேர் கைது

Added : ஜூன் 26, 2020
Share
 கள்ள நோட்டு அச்சடிப்பு திருப்பூரில் 4 பேர் கைது

திருப்பூர்; திருப்பூரில், கள்ள நோட்டு அடித்து புழக்கத்தில் விட்ட, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கள்ள நோட்டு, கம்யூட்டர், பிரின்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், ஆயிபாளையத்தைச் சேர்ந்தவர் சிவபிரகாஷ், 24; காய்கறி கடை வைத்துள்ளார். 23ம் தேதி, இவரது கடையில், பூண்டு வாங்கிய இருவர், 500 ரூபாய் கொடுத்தனர்.பணத்தை வாங்கியஉடன், கள்ளநோட்டு என்பது தெரிந்து, அவர்களிடம் சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் இருவரையும் பிடித்து, நம்பியூர் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், குன்னத்துாரைச் சேர்ந்த பிரபு, 28. திருப்பூர், பூலுவபட்டியைச் சேர்ந்த அழகுதுரை, 34, என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரித்தனர்.இதன் அடிப்படையில், பொம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த கன்னியப்பன், 34; வெள்ளி திருப்பூரை சேர்ந்த பாக்கியராஜ், 38, ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான நான்கு பேரிடம் இருந்து, 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 152, கம்ப்யூட்டர், லேப்டாப், கள்ள நோட்டு அச்சடிக்கும் பிரின்டர்,டூ - வீலர் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் கூறுகையில், 'திருப்பூர், பூலுவபட்டி பாலன் நகரில், வாடகைக்கு வீடு எடுத்து, கள்ள நோட்டு அச்சடித்துள்ளனர். 'திருப்பூர், அவிநாசி, கோபி, சத்தியமங்கலம் பகுதியில் புழக்கத்தில் விட்டுள்ளனர். வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என, தொடர்ந்து விசாரிக்கிறோம்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X