கோர்ட் செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு, 'ஷீல்டு' முக கவசம் அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

மதுரை; 'கொரோனா தடுப்பு களப்பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு, முகத்தை முழுதும் மறைக்கும், 'ஷீல்டு கவர்' வழங்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை, சொக்கிகுளத்தைச் சேர்ந்த, சத்தியமூர்த்தி, 'கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல், தீயணைப்பு, சுகாதாரம், வருவாய்த்துறை, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், தன்னார்வலர்களுக்கு கவச உடை, முக கவசம் போன்ற தற்காப்பு உபகரணங்கள் வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார்.

ஏற்கனவே விசாரணையின் போது, அரசுத் தரப்பில், 'போதிய நிதி ஒதுக்கி பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன' என தெரிவிக்கப்பட்டது.நேற்று, நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வு, காணொலியில் விசாரித்தது.அரசுத் தரப்பில், '54 ஆயிரத்து, 235 போலீசாருக்கு முகத்தை முழுதும் மறைக்கும், 'ஷீல்டு கவர்' போன்ற கவசம் வழங்கப்பட்டுள்ளது. 'மாநகராட்சி பகுதிகளில், துாய்மைப் பணியாளர்கள் முக கவசம், கையுறை அணிந்து பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள் உத்தரவு:சந்தை உட்பட பொது இடங்களில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், முக கவசம் அணியாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

சட்டம் - ஒழுங்கு மற்றும் ஆயுதப்படை உட்பட அனைத்து போலீசாரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.அவர்களுக்கு முகத்தை முழுதும் மறைக்கும், 'ஷீல்டு கவர்' போன்ற கவசம் வழங்க வேண்டும். அனைத்து போலீசாரும் அணிவதை, எஸ்.பி.,க்கள் உறுதி செய்ய வேண்டும். அனைத்து நகராட்சி, ஊராட்சிகளிலும் துாய்மைப் பணியாளர்கள் முக கவசம் அணிவதை, அரசுத் தரப்பில் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டு, வழக்கை முடித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X