பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
 வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறைஅலுவலர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகாஅலுவலகத்தில் வருவாய்துறை அலுவலர்கள் ஜூன் 24 முதல் முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிகின்றனர்.நேற்று மாலை வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம்செய்தனர்.கொரோனா பணியில் மரணமடைந்த வருவாய் துறைஅலுவலர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம், காலி பணியிடங்களைநிரப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

ராமநாதபுரம்கலெக்டர் அலுவலக வளாகத்தில்மாவட்ட செயலாளர் சமீம்ராஜா, தாசில்தார் அலுவலகம் வட்ட கிளைத்தலைவர் பாலசுப்பிரமணி, மண்டல துணை தாசில்தார் சாமிநாதன், பொருளாளர் சிவக்குமார் மற்றும் திருவாடானையில்மாவட்டத்தலைவர் பழனிக்குமார், வட்டகிளைத்தலைவர்கள் பரமக்குடியில்முருகன், ராமேஸ்வரத்தில்ஜப்பார், கீழக்கரையில் ஜெயக்குமார், முதுகுளத்துாரில் பெரியசாமி, ஆர்.எஸ்., மங்கலத்தில் இளையராஜா, கடலாடியில் ரவிக்குமார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X