பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களே 'டேக் இட் ஈஸி'

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

உடுமலை:பள்ளி மாணவர்களுக்கான 'டேக் இட் ஈஸி' நிகழ்ச்சிகளை தொலைபேசிகளில் மாணவர்கள் பங்கேற்க பெற்றோர் உதவ வேண்டும் என உடுமலை சுற்றுப்பகுதி ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.கொரோனா தொற்று பாதிப்புகள் மற்றும் தேர்வு பயம் போன்ற பிரச்னைகளால், மாணவர்களின் மனநிலையை பாதிக்காமல் இருப்பதற்கும், கொரானோ பரவாமல் தடுப்பு வழிகளை பின்பற்றுவதற்கும் ஆலோசனை வழங்க பள்ளிக் கல்வித்துறை, 9266617888 என்ற எண்ணுக்கு 'மிஸ்டு கால்' அளித்து, ஆலோசனை பெறும் 'டேக் இட் ஈஸி' திட்டத்தை செயல்படுத்தியது.இந்த இலவச இணைப்பை அழைத்தால், ஒரு 'டோல் ப்ரீ' எண்ணிலிருந்து ஒரு அழைப்பு மாணவர்களுக்கு வருகிறது. இதில் தேர்வு குறித்து, கதையாக ஒரு உரையாடல் மற்றும் மாணவர்களுக்கான வினா விடை, சந்தேகங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டது.வீட்டில் முடங்கியிருக்கும் குழந்தைகளின் மனநிலையை அறிந்துகொள்வதற்கான வினா விடைகள்தான் இந்நிகழ்ச்சியில் கேட்கப்படுகிறது. இதனால், பெற்றோர் குழந்தைகளை இந்நிகழ்ச்சியில் பங்கேற்க செய்து, பயன்பெற செய்ய வேண்டும் என உடுமலை கல்வி மாவட்டத்தில் ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.ஆசிரியர்கள் கூறுகையில், 'பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஏற்படுத்தப்பட்ட இத்திட்டம், மாணவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. மேலும், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்கும், அவர்களுக்கு அறிவுபூர்வமான செயல்பாடுகளை பின்பற்ற செய்வதற்கும், வீட்டிலுள்ள இந்த காலத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொள்வதற்கும், ஆசிரியர்களை தயங்காமல் அழைத்து ஆலோசனை கேட்கலாம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X