பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.99.60க்கு கொப்பரை கொள்முதல் துவக்கம்: இரு மையங்களில் விவசாயிகளுக்கு அழைப்பு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையின் அடிப்படையில், நெகமம், செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் துவங்குகிறது.தென்னனை விவசாயிகளிடம் இருந்து கொப்பரை கொள்முதல் செய்ய, மத்திய அரசின் கீழ் இயங்கும், தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு செயல்படுகிறது.சமீபத்தில், மத்திய அரசு கொப்பரை ஆதார விலையாக கிலோவுக்கு, 99.60 ரூபாய் நிர்ணயித்தது.
கோவை மாவட்டத்தில் ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் செய்ய, நெகமம் மற்றும் செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டன.முதல் நாளான நேற்று, விவசாயிகள் யாரும் பங்கேற்காததால், கொப்பரை கொள்முதல் நடவடிக்கை துவங்கவில்லை. செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் இசாக் கூறியதாவது:ஆதார விலையில், கொப்பரை கொள்முதல் செய்வதற்காக நெகமம், செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இம்மையங்களில் அரவை கொப்பரை கிலோ, 99.60 ரூபாய்க்கும், பந்து கொப்பரை கிலோ, 103 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. இரு கொள்முதல் மையங்களிலும், அரவை கொப்பரை தலா, நான்காயிரம் டன்னும், பந்து கொப்பரை, 100 டன்னும் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
தென்னை விவசாயிகள் மற்றும் கொப்பரை உற்பத்தியாளர்களை சந்தித்து, மத்திய அரசின் புதிய ஆதார விலைக்கு விற்பனை செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொப்பரை உற்பத்தியாளர்கள் பதிவு செய்து முடிந்ததும், கொள்முதல் செய்யும் பணி துவங்கும்.கொப்பரை விற்பனைக்கு பதிவு செய்ய வரும் உற்பத்தியாளர்கள் அடங்கல், சிட்டா, ஆதார் மற்றும் வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை அவசியம் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, மேற்பார்வையாளர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X