பாலியல் தொல்லை ஆசிரியர், சஸ்பெண்ட்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் தொல்லை ஆசிரியர், 'சஸ்பெண்ட்'

Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (9)
Share
 பாலியல் தொல்லை ஆசிரியர், 'சஸ்பெண்ட்'

ஓசூர்; அரசு பள்ளி ஆசிரியைக்கு, பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அந்தேவனப்பள்ளியில், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதில், சமூக அறிவியல் ஆசிரியராக இருப்பவர் வினோத்குமார், 45.இவர், சக ஆசிரியை ஒருவருக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, கல்வித்துறை அதிகாரிகளிடம், மார்ச், 23ல் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. கடந்த, 23ம் தேதி, அந்தேவனப்பள்ளி, பஞ்., தலைவர் அரவிந்தன் தலைமையில் பெற்றோர், பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, வினோத்குமார் மீதான புகார் குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இதில், வினோத்குமார் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X