போலீசாருக்கு கொரோனா: 45 பேரிடம் பரிசோதனை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு கொரோனா: 45 பேரிடம் பரிசோதனை

Added : ஜூன் 26, 2020
Share
ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ., பெண் போலீஸ் மற்றும் சுகாதார பணியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, 45 பேரிடம் பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும், 23 வயது பெண் போலீசுக்கு, 24ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் சந்தித்தத நபர்கள், உடன் பணிபுரிந்தோர் என, 50 பேரிடம்

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ., பெண் போலீஸ் மற்றும் சுகாதார பணியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, 45 பேரிடம் பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும், 23 வயது பெண் போலீசுக்கு, 24ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் சந்தித்தத நபர்கள், உடன் பணிபுரிந்தோர் என, 50 பேரிடம் மாதிரி சேகரித்தில், 36 வயது ஆண் எஸ்.ஐ., மற்றும், போலீஸ் ஸ்டேஷனில் சுகாதார பணி செய்யும், 56 வயது பெண்ணுக்கு, நேற்று முன்தினம் கொரோனா உறுதியானது.இதையடுத்து, போலீஸ் ஸ்டேஷன், குடியிருப்பு மற்றும் சுகாதார பணியாளர் தங்கியிருந்த பகுதிகளை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறையினர் 'சீல்' செய்துள்ளனர்.இந்நிலையில், எஸ்.ஐ., மற்றும் சுகாதார பணியாளர்கள் சந்தித்த நபர்கள், அவர்களுடன் வசிப்பவர்கள் என, 45 பேரிடம் நேற்று சுகாதாரத்துறையினர் மாதிரி சேகரித்தனர். மேலும், அனைவரையும் தனிமைப்படுத்தி, கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X