சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ரேடியோ'வில் குண்டு வைத்து தம்பி கொலை; அண்ணன் கைது

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

சேலம்; 'ரேடியோ'வில் குண்டு வைத்து, தம்பியை கொன்ற அண்ணனை, போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், வெள்ளிமலையார் தோட்டத்தைச் சேர்ந்தவர், மணி, 50; விவசாயி. 16ம் தேதி சாலையில் கிடந்த, எப்.எம்., 'ரேடியோ'வை வீட்டுக்கு எடுத்துச் சென்று, மறுநாள் மதியம் மின் இணைப்பு கொடுத்தார்.அப்போது, ரேடியோ வெடித்து, மணி உடல் சிதறி பலியானார். வீட்டிலிருந்த மூன்று பேர் காயமடைந்தனர். சேலம், ஏ.டி.எஸ்.பி., அன்பு தலைமையில், மூன்று தனிப்படைகள் அமைத்து, போலீசார் விசாரித்தனர்.

இந்நிலையில், 23ம் தேதி, மணியின் அண்ணன்செங்கோடன், 63, வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்று, காப்பற்றப்பட்டார்.தொடர் விசாரணையில், முன்விரோதத்தில், தம்பியை குண்டு வைத்து கொன்றது செங்கோடன் என்பது தெரிந்தது. போலீஸ் விசாரணைக்கு பயந்து, தற்கொலை நாடகமாடியதும் தெரிந்தது.நேற்று முன்தினம், அவர் கைது செய்யப்பட்டார். சேலம், எஸ்.பி., தீபா கானிகேர் கூறியதாவது: இறந்த மணிக்கு, செங்கோடன் உட்பட மூன்று சகோதரர்கள் உள்ளனர். ஓராண்டுக்கு முன், தங்கள் நிலத்துக்கு வழிப்பாதையை விலைக்கு வாங்கினர். இதற்கு, செங்கோடன் உடன்படவில்லை.

தற்போது, பாதையை பயன்படுத்த செங்கோடன் அனுமதி கேட்டபோது, மணி சம்மதிக்கவில்லை. இதனால், இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இதனால், நாமகிரிப்பேட்டையில் இருந்து, மூன்று ஜெலட்டின், டெட்டனேட்டர் வெடி மருந்தை செங்கோடன் வாங்கி வந்தார். பின், சேலத்திலிருந்து வாங்கி வந்த, எப்.எம்., ரேடியோவில், வெடி பொருட்களை பொருத்தி, மணி தோட்டத்துக்கு செல்லும் வழியில் வைத்துள்ளார்.அதை, மணி வீட்டிற்கு எடுத்துச் சென்று, மின் இணைப்பு கொடுத்தபோது, வெடித்து பலியானார். வெடி மருந்து விற்றவர் மீதும், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X