கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண்

Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண்

கோல்கட்டா,: கோல்கட்டாவில், கணவருடன் வாழும், 30 வயது பெண்ணின் உடலுக்குள், முழுமையாக ஆணுக்கான தன்மை இருப்பது, டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கோல்கட்டாவின் பிர்பும் பகுதியைச் சேர்ந்த, 30 வயது பெண்ணுக்கு, ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்நிலையில், வயிற்றுப்பகுதியில் கடும் வலி காரணமாக, அங்குள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக வந்தார்.டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில், அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அத்துடன், அவர் ஒரு பெண் அல்ல; பெண்ணின் உடலமைப்பைக் கொண்ட ஆண் என்பதும் தெரிய வந்தது.

இந்த அதிர்ச்சிகரமான முடிவு குறித்து, டாக்டர்கள் கூறியதாவது:உருவம், குரல், மார்பகத்தின் வளர்ச்சி, பிறப்புறுப்பு உள்ளிட்ட அனைத்திலும், அவர் முழுமையாக பெண்ணாக உள்ளார். ஆனால், அவரது உடலில், பெண்ணுக்கான கருப்பை மற்றும் சினை முட்டைகள் உருவாகும் 'ஓவரி' இல்லை. இதனால், அவருக்கு இதுவரை மாதவிடாய் வந்ததில்லை.
பெண்களுக்கு, குரோமோசோம்கள் 'எக்ஸ் - எக்ஸ்' என, இருக்கும். அவரது குரோமோசோம்கள், ஆண்களுக்கான 'எக்ஸ் - ஒய்' அமைப்பில் உள்ளன. அவருக்கு, வளர்ச்சி அடையாத, விந்தணுக்களின் உற்பத்தியும் இருக்கிறது. பெண்ணுக்கான ஹார்மோன்களின் முழுமையான சுரப்பால், அவர், பெண்ணாக தோற்றம் அளிக்கிறார்.

உலகில், 22 ஆயிரம் பேரில் ஒருவருக்கு, இதுபோன்ற நிலை ஏற்படும் என, மருத்துவத்துறை கணித்துள்ளது.அவரது புற்றுநோய் பாதிப்பிற்கு, 'கீமோதெரபி' முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதால், நலமுடன் உள்ளார். பிறந்தது முதல் பெண்ணாக வளர்ந்த அவர், ஒன்பது ஆண்டுகளாக கணவருடன் வாழ்கிறார்.அவர்கள் விரும்பினால், இந்த வாழ்க்கையைத் தொடரலாம். ஆனால், குழந்தை பிறக்காது என்பதை தெளிவுபடுத்திஉள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29-ஜூன்-202004:06:58 IST Report Abuse
J.V. Iyer அம்மாடி என்னெல்லாமோ செய்திகள் வந்து வயத்தை கலக்குகின்றனவே கடவுளே
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
28-ஜூன்-202012:04:40 IST Report Abuse
madhavan rajan அவரது தங்கை 28 வயது. அவருக்கும் பரிசோதனை செய்ததில் அவரும் இதேபோல பெண்வடிவில் இருக்கும் ஆண் தன்மை கொண்டவர் என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
27-ஜூன்-202013:20:34 IST Report Abuse
Vena Suna இப்படி பல பெண்கள் இருக்கிறார்கள்...அவர்களை கல்யாணம் செய்து வைக்கிறார்கள்..அவர்கள் உடனே கணவனை விட்டு விட்டு அவள் அம்மாவோடு வாழ சென்று விடுகிறாள்...கணவன் வாழ்க்கை..ஜூட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X