பொது செய்தி

தமிழ்நாடு

வாழைத்தார் ஏல மையத்துக்கு வரத்து குறைவு; விலை உயர்வு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
 வாழைத்தார் ஏல மையத்துக்கு வரத்து குறைவு; விலை உயர்வு

ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அருகே, வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை வாழைத்தார் ஏலம் நடக்கிறது. இதில், ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், கோட்டூர் பகுதி விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்கின்றனர். நேற்று மாலை வழக்கம் போல ஏலம் நடந்தது. இதில், வரத்து குறைவு காரணமாக, விலை உயர்ந்தது.வியாபாரிகள் கூறியதாவது:ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வாழைத்தார் வரத்து குறைந்துள்ளது. நாளுக்கு நாள் தேவை அதிகரித்து வரும் நிலையில், வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன், 400 ரூபாய்க்கு விற்பனையான கதளி ரக வாழைத்தார், இந்த வாரம், 450 முதல் 500 ரூபாய் வரையில் விற்பனையாகிறது.செவ்வாழை, 1,000 ரூபாய்க்கு விற்பனையானது. பூவன், 450; நேந்திரன், 550; கற்பூரவல்லி, 700 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், அனைத்து ரக வாழைத்தாரும், 60 ரூபாய் முதல் நுாறு ரூபாய் விலை உயர்ந்துள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X