அரசியல் செய்தி

தமிழ்நாடு

மருந்தின்றி குணமான 40 ஆயிரம் பேர் சுகாதார துறை அமைச்சர் பெருமிதம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
விழுப்புரம்; ''இந்தியாவிலேயே, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மருந்து, ஊசி இன்றி, 40 ஆயிரம் பேரை குணப்படுத்தி பாதுகாத்துள்ளோம்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நேற்று காலை ஆய்வு செய்தார்.பின், கலெக்டர்
 மருந்தின்றி குணமான 40 ஆயிரம் பேர் சுகாதார துறை அமைச்சர் பெருமிதம்

விழுப்புரம்; ''இந்தியாவிலேயே, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மருந்து, ஊசி இன்றி, 40 ஆயிரம் பேரை குணப்படுத்தி பாதுகாத்துள்ளோம்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நேற்று காலை ஆய்வு செய்தார்.பின், கலெக்டர் அண்ணாதுரை, எஸ்.பி., ஜெயகுமார், மருத்துவ கல்லுாரி டீன் குந்தவிதேவி மற்றும் டாக்டர்கள், அதிகாரிகளோடு, நோய் தடுப்பு பணிகள் குறித்து, ஆலோசனை நடத்தினார்.

பின், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில், மூன்று மாதங்களாக, கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் நோய் தடுப்பு பணியில், 24 மணி நேரமும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, 695 பேரில், 430 பேர் குணமடைந்துள்ளனர். 265 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக, 2,100 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் தான், அதிக அளவில் மருத்துவ பரிசோதனைகளை செய்துள்ளோம்.

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த வைரஸ் நோயிலிருந்து, தமிழகத்தில் மட்டும் இதுவரை, 40 ஆயிரம் பேரை, எவ்வித மருந்தும், ஊசியும் இல்லாமல், குணப்படுத்தியுள்ளோம்.தமிழகத்தில் தான், குறைந்த இறப்பு விகிதத்தை பராமரித்து வருகிறோம். விலை உயர்ந்த வீரியமிக்க மருந்துகளை, தமிழ்நாடு மருத்துவ கார்ப்பரேஷன் மூலம் வரவழைத்து, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பியுள்ளோம். தமிழகத்தில் போதிய அளவிற்கு, மருந்துகள் கையிருப்பு உள்ளது. அது போன்று, பி.பி.இ., மாஸ்க், கையுறை, கிருமி நாசினிகள் தொடர்ந்து தட்டுப்பாடின்றி கிடைக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு, கூடுதலாக டாக்டர்கள், பணியாளர்கள், டெக்னீஷியன்களை நியமிக்க, முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X