சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சந்தேக கணவரின் பிறப்புறுப்பில் கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி

Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுச்சேரி; சந்தேக கணவரின் பிறப்புறுப்பில் கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி மீது, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

புதுச்சேரி, வீராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் பாண்டியன், 38; மீனவர். இவரது மனைவி கவிதா, 35. இரண்டு மகள்கள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக கவிதா, கணவரை பிரிந்து, குழந்தைகளுடன், தாய் வீட்டில் வசித்து வருகிறார்.ஊரடங்கால், வேலை இல்லாமல் இருந்த பாண்டியன், கவிதாவிற்கு போன் செய்துள்ளார். 'என் சகோதரியிடம் பணம் வாங்கி தருகிறேன், சொந்தமாக படகு வாங்கி தொழில் செய்யுங்கள்' என, மனைவி கூறினார்.பணம் வாங்க நேற்று முன்தினம், கவிதாவின் சகோதரி சரசு வீட்டிற்கு சென்றார். அவரிடம் சரசு, மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறினார்.

அதற்கு பாண்டியன், 'கவிதா வேறு ஒரு நபருடன் தொடர்பு வைத்துள்ளார். முதலில் அவருக்கு புத்தி சொல்' எனக் கூறியுள்ளார்.பின் சரசு, பணம் எடுக்க வங்கிக்கு சென்றார். பாண்டியன் வீட்டில் துாங்கினார். தன்னை வேறு நபருடன் தொடர்புபடுத்தி பேசியதால் ஆத்திரமடைந்த கவிதா, கொதிக்க வைத்த பாலை, துாங்கிக் கொண்டிருந்த கணவரின் ஆண் உறுப்பில் ஊற்றினார்.வலியால் துடித்த பாண்டியன், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதலியார்பேட்டை போலீசார், கவிதா மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
27-ஜூன்-202010:46:35 IST Report Abuse
Girija உனக்கு வேணும்டா, மனைவி இன்னொருவருடன் தொடர்பு வைத்திருக்கிறாள் என்று பிரிந்துவிட்டு பிறகு அவளிடமே பணம் கேட்ட உன் ஈனத்தனத்தை என்ன சொல்வது? உன் உள் மணது கணக்கு என்ன? அவள் காலாகாதலின் மூலம் கூட உனக்கு பணம் தந்தால் உனக்கு பரவாயில்லை, அப்படித்தானே ? உன்னை இப்படி தண்டித்தால் தான் கொலை குற்றம் வராது , நீயும் வெளியில் சொல்ல முடியாது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X