சந்தேக கணவரின் பிறப்புறுப்பில் கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சந்தேக கணவரின் பிறப்புறுப்பில் கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி

Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (1)
Share

புதுச்சேரி; சந்தேக கணவரின் பிறப்புறுப்பில் கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி மீது, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

புதுச்சேரி, வீராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் பாண்டியன், 38; மீனவர். இவரது மனைவி கவிதா, 35. இரண்டு மகள்கள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக கவிதா, கணவரை பிரிந்து, குழந்தைகளுடன், தாய் வீட்டில் வசித்து வருகிறார்.ஊரடங்கால், வேலை இல்லாமல் இருந்த பாண்டியன், கவிதாவிற்கு போன் செய்துள்ளார். 'என் சகோதரியிடம் பணம் வாங்கி தருகிறேன், சொந்தமாக படகு வாங்கி தொழில் செய்யுங்கள்' என, மனைவி கூறினார்.பணம் வாங்க நேற்று முன்தினம், கவிதாவின் சகோதரி சரசு வீட்டிற்கு சென்றார். அவரிடம் சரசு, மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறினார்.

அதற்கு பாண்டியன், 'கவிதா வேறு ஒரு நபருடன் தொடர்பு வைத்துள்ளார். முதலில் அவருக்கு புத்தி சொல்' எனக் கூறியுள்ளார்.பின் சரசு, பணம் எடுக்க வங்கிக்கு சென்றார். பாண்டியன் வீட்டில் துாங்கினார். தன்னை வேறு நபருடன் தொடர்புபடுத்தி பேசியதால் ஆத்திரமடைந்த கவிதா, கொதிக்க வைத்த பாலை, துாங்கிக் கொண்டிருந்த கணவரின் ஆண் உறுப்பில் ஊற்றினார்.வலியால் துடித்த பாண்டியன், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதலியார்பேட்டை போலீசார், கவிதா மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X