தமிழ்நாடு

அதிகரிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் கடத்தல்: கடிவாளம் போடுமா மாவட்ட நிர்வாகம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் கடத்தல் அதிகரிக்கும் நிலையில் வருவாய்துறையினரும்,போலீசாரும் கண்டு கொள்ளாத நிலை தான் உள்ளது. இதனால் ஆறுகள் நீர்வரத்து கால்வாய் கட்டாந்தரையாக மாறி விட்டன.

ராமநாதபுரம் அருகே கோப்பேரிமடம் மஞ்சளோடை பகுதி, பெரிய கண்மாய் வைகையாற்று நீர்வரத்து கால்வாய் பகுதிகள், திருப்புல்லாணி அருகே பனையங்கால், ஆழ்வார்கூட்டம், சாயல்குடி அருகே மலட்டாறு, கடலாடி அருகே மலட்டாற்று பகுதிகள், மூக்கையூர் முகத்துவார ஆற்றுப்பகுதி, கூரான்கோட்டை ஆற்றுப்பகுதி, சிக்கல் தாதன்குடி கண்மாய், கடலாடி மங்களம் சாலை, கொம்பூதி சாலை, கமுதி அருகே குண்டாறு, பரமக்குடி வைகை ஆறு, பிரப்பன்வலசை, உச்சிப்புளி பகுதி தனியார் நிலங்கள், என மாவட்டம் முழுவதும் மணல் கொள்ளை கொடி கட்டி பறக்கிறது.

இதனை தடுக்க வேண்டிய வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர். பெயருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக வி.ஏ.ஓ.,க்கள் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதனால் மணல் கடத்தல் கும்பல் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.


நிலத்தடி நீருக்கு ஆபத்து

இங்குள்ள மணல் வளத்தை கொள்ளையடித்து வெளி மாவட்டங்களில் அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பெறுகின்றனர். ஏற்கனவே மாவட்டத்தின் 75 சதவீதம் நிலங்களில் கடல் நீர் புகுந்து நிலத்தடி நீர் உப்புத்தன்மை கொண்டதாக மாறிவிட்டது.தொடரும் மணல் கொள்ளையால் மீதம் உள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீர் உப்புத்தன்மையாக மாறும் அபாயம் உள்ளது. மணற்பரப்பான இடங்களில் தான் மழை நீர் ஊற்று கிடைத்து தண்ணீர் சுவையாக மாறும். எனவே மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகமும், எஸ்.பி., வருண்குமாரும் கடத்தல்காரர்களுக்கு கடிவாளம் போட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X