பரமக்குடியில் பழுதடைந்த எரிவாயு தகனமேடை: பூட்டிய அறையில் உடலை எரிக்கும் அவலம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
 பரமக்குடியில் பழுதடைந்த எரிவாயு தகனமேடை: பூட்டிய அறையில் உடலை எரிக்கும் அவலம்

பரமக்குடி:பரமக்குடி மஞ்சள் பட்டினத்தில் செயல்படும் எரிவாயு தகன மேடைபழுதடைந்து உள்ளதால், பூட்டிய அறையிலேயே உடல்களை எரிக்கும்அவலம் அரங்கேறி வருகிறது.

பரமக்குடி நகராட்சி சார்பில் 2012 - 13ல் எரிவாயு தகன மேடைபல லட்சம் செலவில் அமைக்கப்பட்டன.மேடை திசை மாற்றிஅமைக்கப்பட்டதால் சில வருடம் பயன்பாடின்றி கிடந்தது. பராமரிப்புக்குப்பின் திறக்கப்பட்டது. இதன் மூலம் வெளியிடத்தில் உடலைஎரிப்பது தடுக்கப்பட்டது.தொடர்ந்து சில மாதங்கள் மட்டுமே செயல்பட்ட தகனமேடை மீண்டும் வீணாகியது.

இந்நிலையில் கடந்த வருடம் நகராட்சி சார்பில்,மீண்டும் சில லட்சங்கள் செலவில் சீர் செய்யப்பட்டது. ஆனால் சிலநாட்களாக எரிவாயு மிஷினில் ஏற்பட்ட கோளாறுகளை சரி செய்யாமல்பூட்டிய அறையிலேயே விறகுகளை வைத்து எரிக்கும் அவலம் தொடர்கிறது. இதனால் கட்டடத்தின் ஒவ்வொரு ஜன்னல் வழியாகவும் புகை அப்பகுதி முழுவதும் சூழ்ந்து செல்கிறது. மேலும் ஒட்டு மொத்த கட்டடமும்அனல் மற்றும் புகை மண்டலத்தால் இடிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நகரில் இறப்பு அதிகரித்துள்ளதால்,ஒரே நாளில் 3 பேர் வரை எரிக்கும் நிலை உள்ளது. இதனால் அருகில்குடியிருப்போர், குழந்தைகள், முதியவர்கள் மூச்சுத்திணறலுக்குஆளாகி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X