சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளித்த பெண் சாவு

Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுக்கோட்டை; போலீஸ் ஸ்டேஷன் முன், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட பெண், இறந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 49. இவரது இரண்டாவது மனைவி செல்வி, 40. திருட்டு நகையை வாங்கி விற்பனை செய்த வழக்கில், ராஜேந்திரன் சிறையில் உள்ளார்.இது தொடர்பாக, 7ம் தேதி, செல்வியை போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதனால், விரக்தி அடைந்த செல்வி, ஸ்டேஷன் முன், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார்.போலீசார், தீயை அணைத்து, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சை பலனின்றி செல்வி, நேற்று இறந்தார்.ராஜேந்திரனின் முதல் மனைவி, ஏற்கனவே இறந்து விட்டார். செல்வியும் இறந்து விட்டார். ராஜேந்திரன் சிறையில் இருப்பதால், அவர்களது, 5 - 14 வயதுடைய ஐந்து குழந்தைகள், ஆதரவின்றி தவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samkey - tanjore,இந்தியா
27-ஜூன்-202021:35:36 IST Report Abuse
samkey எல்லா புகழும் எடபாடிக்கே ... வர வர பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷன் செல்லவே பயப்படுகின்றனர். இந்த நிலை நீடித்தால் தூக்கி வீசப்படுவீர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X