பரமக்குடியில் வி.ஏ.ஓ.,க்களுக்கு கொரோனா: பொதுமக்கள் விழித்துக்கொள்வார்களா...| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் வி.ஏ.ஓ.,க்களுக்கு கொரோனா: பொதுமக்கள் விழித்துக்கொள்வார்களா...

Added : ஜூன் 26, 2020
Share
பரமக்குடி:பரமக்குடியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவி.ஏ.ஓ.,க்களும் தொற் றால் பாதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருந்து தொற்று பாதிப்பில் இருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 500 யைநெருங்குகிறது. இந்நிலை யில் தொடர்ந்து கலெக்டர் அலுவலக ஊழியர்கள், சுகாதாரத்துறை, தபால் துறை, வருவாய்த்

பரமக்குடி:பரமக்குடியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவி.ஏ.ஓ.,க்களும் தொற் றால் பாதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் விழிப்புடன் இருந்து தொற்று பாதிப்பில் இருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 500 யைநெருங்குகிறது. இந்நிலை யில் தொடர்ந்து கலெக்டர் அலுவலக ஊழியர்கள், சுகாதாரத்துறை, தபால் துறை, வருவாய்த் துறையினர் என தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பரமக்குடி அருகே பாண்டியூர், பொட்டக வயல் கிராம வி.ஏ.ஓ., க்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது போன்ற தடுப்பு பணியில் ஈடுபட் டுள்ளவர்களுக்கு தொற்று உறுதியாகி வரும் நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ள பொதுமக்கள் பீதியில் உள்ளனர். ஆகவே பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைதவிர்ப்பதுடன், அத்தி யா வசிய தேவைக்கு மட்டுமே பிறரை அணுக வேண்டும்.

மேலும் முகக்கவசம் அணிதல், கை கழுவுதல்,சமூக இடைவெளியை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.பரமக்குடி நகரில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 100 யை நெருங்கி வருகிறது. மேலும் பரமக்குடி அரசு மருத்துவமனையில்போதிய இடவசதியின்றி, அரசு கலைக் கல்லுாரியில் செயல்படும் சிறப்பு கொரோனா சிகிச்சை வார்டில் தொற்று பாதித்தோர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X