பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 மாணவருக்கான ஊக்கத்தொகை தாமதம்; வங்கி கணக்கு விபரம் சேகரிப்பில் தொய்வு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

சிவகங்கை; வங்கி கணக்கு விபரம் சேகரிப்பு, பதிவேற்றத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் 2019-20 கல்வி ஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கான ஊக்கத்தொகை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இடைநிற்றலை தவிர்க்க பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம், பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.ஆயிரத்து 500 வீதம் வங்கி கணக்கில் பணம் வழங்கப்படும். 2019-20ல் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இன்னும் ஊக்கத்தொகை கிடைக்கவில்லை.

ஊரடங்கு காலத்தில் உயர்கல்விக்கான முயற்சிகளை எடுக்க நிதியின்றி மாணவர்கள் தவிக்கின்றனர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 5 லட்சத்து 35 ஆயிரத்து 82 ஆயிரம் மாணவர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியானவர்கள். இதில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 108 பேரின் வங்கி கணக்கு மட்டும் 'எமிஸ்'ல் ஏற்றியுள்ளனர். 3 லட்சத்து 65 ஆயிரத்து 974 பேரின் வங்கி கணக்குகள் பதிவேற்றும் பணி நடக்கிறது. 2019-20 ஆண்டுக்கான ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X