பொது செய்தி

தமிழ்நாடு

முதன் முறையாக கொரோனா நோயாளிகளுக்கு'கவுன்சிலிங்'

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கொரோனா நோயாளிகளுக்கு'கவுன்சிலிங்'

மதுரை : கொரோனா நோயாளிகளின் மனஅழுத்தத்தை போக்க மாநிலத்தில் முதன்முறையாக மதுரையில் கவுன்சிலிங் திட்டம் துவங்கப்படுகிறது.மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாகியுள்ளது.

தினமும் 20 முதல் 30 பேர் இறக்கின்றனர். தொற்றில் இருந்து மீண்டு பூரண நலமுடன் வீடு திரும்புவோரும் கணிசம். கொரோனாவிடம் எச்சரிக்கை அவசியம் தான். அதற்காக தொற்று ஏற்பட்டால், கொடிய நோய் தாக்கியதாக கருதி, மனஅழுத்தத்திற்கு ஆளாக வேண்டிய தேவையில்லை. மக்களின் புறக்கணிப்பு, தேவையற்ற அச்சத்தால் சில இடங்களில் கொரோனா நோயாளிகள் தற்கொலை செய்து உயிரை மாய்க்கின்றனர்.

சில நாட்களில் குணமடைந்து வீடு திரும்பிவிடுவோம் என்பதை மனதில் பதியவைக்காததன் விளைவு தான் இது. மனதளவில் கொரோனா நோயாளிகளுக்கு கவுன்சிலிங் தேவைப்படுகிறது. இதை வலியுறுத்தி 'கொரோனா நோயாளிகளுக்கு கவுன்சிலிங் தரவேண்டும்' என்ற தலைப்பில் தினமலர் நாளிதழ் நேற்று செய்தி வெளியிட்டது.இது மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் கவனத்திற்கு சென்றது. உடனடியாக கொரோனா கவுன்சிலிங் திட்டத்தை தயாரித்துள்ளார்.

நாளை முதல் மதுரை மாவட்டத்தில் அமலாகிறது.அவர் கூறுகையில், 'பலரும் கொரோனாவை ஓரு கொடிய நோயாக பார்க்கின்றனர். அது உண்மையல்ல. பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தான் அதிகமே தவிர, இறப்பு வெகு குறைவு. அதிலும் தமிழகத்தில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுவிடுகின்றனர்.நோயாளிகளை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பொறுப்பை அரசு ஏற்றுள்ளது.
எனவே பயப்படவோ, மனவேதனை அடையவோ தேவையில்லை. இதை புரிய வைப்பதற்காக பரிசோதனையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதும் கவுன்சிலிங் அளிக்க மனநல நிபுணர்களை ஏற்பாடு செய்துள்ளோம். இவர்கள் நோயின் தன்மை, கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தெரிவித்து மனதைரியம் அளிப்பர். பின்னர் வார்டுகளுக்கு நோயாளிகள் அழைத்து வரப்படுவர். அங்கும் கவுன்சிலிங் வழங்க முடிவு செய்துள்ளோம்' என்றார்.



Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-ஜூன்-202007:56:22 IST Report Abuse
Lion Drsekar பாராட்டுக்கள் , இருந்தாலும் குடி குடியைக் கெடுக்கும், உயிருக்கு ஆபத்து என்ற வாசகத்தை படித்து ,,,? வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X