சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதல் விவகாரம்: வாலிபர் தற்கொலை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

திருச்சி; காதலியின் உறவினர்கள்மிரட்டியதால், வாலிபர்தற்கொலை செய்து கொண்டார்,

திருச்சி, சமயபுரத்தைச் சேர்ந்தவர் தினேஷ், 21; தாயுடன், வாடகை வீட்டில் வசித்து வந்தார். டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்த தினேஷ், ஆந்திராவில், ரயில்வே ஒப்பந்ததாரரிடம் வேலை செய்து வந்தார். சமயபுரத்தில் வசிக்கும், வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை, மூன்று ஆண்டுகளாக தினேஷ் காதலித்து வந்தார். ஊரடங்கு காரணமாக, சமயபுரம் வந்தவர், காதலியை சந்தித்துள்ளார்.இதனால், ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள், 24ம் தேதி, தினேஷ் வீட்டிற்கு வந்து, மிரட்டிச் சென்று உள்ளனர்.

இதனால் மனமுடைந்த தினேஷ், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தினேஷ் தாய் புகார்படி, பெண்ணின் தாய் உட்பட ஆறு பேர் மீது, சமயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X