சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் சிக்கிய 22 போலி டாக்டர்கள்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ராணிப்பேட்டை; ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், பெண் உட்பட, 22 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஏராளமான போலி டாக்டர்கள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதாக, கலெக்டர் திவ்யதர்ஷினிக்கு புகார்கள் சென்றன. அவர்களை பிடிக்க சுகாதாரத் துறை, வருவாய்த் துறையினர் அடங்கிய, சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டன.நேற்று மாவட்டம் முழுதும், சிறப்பு படையினர், அதிரடியாக பல கிளினிக்குகளில் சோதனை நடத்தினர்.

அரக்கோணம், திருமால்பூர், தாமரைப்பாக்கம், சோளிங்கர், கலவை உட்பட பல்வேறு பகுதிகளில், ஒரு பெண் உட்பட, 22 போலி டாக்டர்கள் சிக்கினர்.இவர்கள், இரண்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை மட்டும் படித்து, எம்.பி.பி.எஸ்., என, 'போர்டு' போட்டு, கிளினிக் நடத்தியதும், தற்போது, கொரோனாவுக்கு, 2,000 ரூபாய் வாங்கி, மருந்து கொடுத்து வந்ததும் தெரிந்தது. சுகாதாரத் துறையினர், அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் கொடுத்த புகாரின்படி, 17 போலி டாக்டர்களை, போலீசார் கைது செய்தனர். மற்றவர்களிடம் விசாரணை நடக்கிறது. இவர்கள் நடத்தி வந்த, 36 கிளினிக்குகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X