ஹாங்காங் மசோதா : அமெரிக்க செனட் ஒப்புதல்

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

வாஷிங்டன்: ஹாங்காங் நாட்டின் தன்னாட்சியை பாதுகாக்கவும், அங்குள்ள மக்களின் சுதந்திரத்திற்கு எதிராக செயல்படும் தனி நபர்கள், போலீசார், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கவும் வகை செய்யும் மசோதா, அமெரிக்க, செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 'ஒரு நாடு, இரு நிர்வாகம்' என்ற ஒப்பந்தத்தை மீறி, ஹாங்காங்கின் தன்னாட்சி உரிமையை சீனா பறிக்க முயன்றால், அதற்கு காரணமானோர் மீது தடை விதிக்க, மசோதா வகை செய்கிறது. இந்த மசோதா, பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டு, சட்ட வடிவம் பெறும் பட்சத்தில், ஹாங்காங்கிற்கு எதிராக நடக்கும் சீனாவைச் சேர்ந்தவர்கள், அமெரிக்கா வர தடை விதிக்க முடியும். அத்துடன் அமெரிக்காவில் உள்ள அவர்களின் சொத்துக்களையும் முடக்க முடியும். இது, நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X