ரதுல் பூரி வீடுகளில் சோதனை| Dinamalar

ரதுல் பூரி வீடுகளில் சோதனை

Added : ஜூன் 27, 2020
Share

புதுடில்லி; வங்கி கடன் மோசடி தொடர்பாக, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர், கமல்நாத்தின் உறவினர் ரதுல் பூரியின் வீடு மற்றும் அலுவலகங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, கமல்நாத்தின் மருமகன் ரதுல் பூரி. இவர், 'மோசர்பேயர்' என்ற, 'சி.டி., - டி.வி.டி.,' தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்திற்காக, 2009ல், பல்வேறு வங்கிகளில் கடன் பெற்றார்.

இதில், தங்களிடம் வாங்கிய, 780 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தவில்லை என, பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் செய்தது. இது பற்றி சி.பி.ஐ., மற்றம் அமலாகத்துறை விசாரித்து வருகின்றன.இந்நிலையில், இந்த மோசடி தொடர்பாக, ரதுல் பூரிக்கு சொந்தமான, டில்லி மற்றும் நொய்டாவில் உள்ள வீடுகள், அலுவலகங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.கொரோனா பரவல் காரணமாக, பாதுகாப்பு கவசங்கள் அணிந்து, அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன. சோதனையில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X