பொது செய்தி

இந்தியா

செய்தி சில வரிகளில்...

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

டில்லி சுகாதார அமைச்சர், 'டிஸ்சார்ஜ்'

புதுடில்லி: டில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், கொரோனா சிகிச்சை முடிந்து, தனியார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடந்த, ௧௭ம் தேதி அரசு மருத்துவமனையில் சத்யேந்தர் ஜெயின் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டதை அடுத்து, கடந்த, ௧௯ல், தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பிளாஸ்மா சிகிச்சைக்கு பின் உடல் நிலை தேறியது. நேற்று, அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

அபிஷேக் சிங்விக்கு தொற்று

புதுடில்லி: காங்., செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்விக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, தொற்று பரிசோதனை நடந்தது. அவரது மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யூசுப் மேமன் மரணம்

மும்பை: மும்பையில், ௧௯௯௩ம் ஆண்டு நடந்த, தொடர் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளியும், தலைமறைவு குற்றவாளியான டைகர் மேமனின் சகோதரருமான யூசுப் மேமன், ௫௭, மஹாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று காலை, அவருக்கு மூச்சு திணறலும், நெஞ்சு வலியும் ஏற்பட்டதை அடுத்து, மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்

சண்டிகர்: திடீர் கோளாறு காரணமாக, இந்திய விமானப்படையின் சேத்தக் ரக ஹெலிகாப்டர், ஹரியானா மாநிலத்தில், தேசிய விரைவுச் சாலையில், அவசரமாக தரையிறக்கப்பட்டது. வழக்கமான பணிகளுக்காக சென்ற போது, ஹெலிகாப்டரில் ஏற்பட்ட பழுது காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தரையிறக்கப்பட்டதாகவும், இதில், எந்த சேதமும் இல்லை என்றும், ராணுவ அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X