பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...விருதுநகர்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

தினமலர் செய்தியால் உயர்ந்த ஒயர்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே மொட்டமலை - கலங்காப்பேரி இடையே தார் ரோடு அமைக்கப்பட்டது. மின் கம்பம் தாழ்வாக வாகனங்கள் செல்லும் போது மின் ஒயரில் உரசி அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து உயரமான மின் கம்பம் அமைத்து மின் ஒயர் உயர்த்தி கட்டப்பட்டது.

வீரர்களுக்கு காங்., அஞ்சலி
ராஜபாளையம்: ராஜபாளையம் செட்டியார்பட்டியில் நகர காங்., சார்பில் சீனா தாக்குதலில்
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நகர தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார்.மேற்கு மாவட்ட தலைவர் தளவாய்பாண்டியன், சொத்து மீட்புக்குழு உறுப்பினர்ராஜலிங்க ராஜா உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

ஆதரவற்றவர்களுக்கு உதவி

சிவகாசி: சிவகாசி ஏ.பி.ஜே., உணவு வங்கி சார்பில் ஆதரவற்ற விதவைகள், மாற்று திறனாளிகள்,முதியவர்களுக்கு அரசி, உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி முன்னாள் தலைவர்ஞானசேகரன் தலைமை வகித்தார். ஏ.பி.ஜே.,நிறுவனர் சலீம், முருகேசன், மைக்கேல், நாகராஜ் கலந்து கொண்டனர்.

நாடார் சங்கம் வேண்டுகோள்

விருதுநகர்: நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் அறிக்கை: போலீசார் தாக்கியதில் இறந்த சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நிதியுதவி, அரசு வேலை வழங்கிய முதல்வருக்கு நன்றி. தாக்குதல் நடத்திய எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன்,
ரகு கணேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து பணி நீக்கம் செய்ய வேண்டும், என கேட்டுக்கொண்டார்.

ஏட்டுக்கு தொற்று; போலீசாருக்கு சோதனை

வத்திராயிருப்பு: நத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டுவிற்கு கொரோனா உறுதியாக
ஸ்டேஷனுக்கு கிருசிநாசினி தெளித்து மூடபட்டது. இங்கு பணியாற்றிய இரு எஸ்.ஐ.,க்கள் உட்பட 28 போலீசாருக்கு பரிசோதனை செய்யபட்டது. பாதிக்கபட்டவர் வசிக்கும் பகுதியிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: போலீஸ் தாக்கியதில் சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் பலிக்கு
காரணமான எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மீது கொலை வழக்குப்பதிவு
செய்யக்கோரி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் அர்ச்சுனன் தலைமை வகித்தார்.

மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் சுகாதாரத்துறை அதிகாரிகள் பிரம்மநாயகம், பழனிகுரு ஆகியோர் பஸ் ஸ்டாண்ட், ராஜாஜி ரோடு பகுதி கடைகளில் ஆய்வு செய்தனர். மாஸ்க் அணியாத 26 வியாபாரிகள், பொதுமக்கள் 11பேருக்கு தலா ரூ.100அபராதம் விதித்தனர்.

தாலுகா அலுவலகத்திற்கு பூமிபூஜை

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் தாலுகா அலுவலகம், குடியிருப்பு கட்டட பணியை
அமைச்சர்ராஜேந்திரபாலாஜி பூமிபூஜை செய்து துவக்கிவைத்தார். எம்.எல்.ஏ.,சந்திரபிரபா, மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி, நிலவள வங்கி தலைவர் முத்தையா, மத்தியகூட்டுறவு வங்கி தலைவர் மயில்சாமி,ஒன்றிய தலைவர் சிந்துமுருகன், துணைத்தலைவர் ரேகா
பங்கேற்றனர்.

கிருமிநாசினி தெளிப்பு

காரியாபட்டி: மேலதுலுக்கங்குளர் பொறியாளர் கிருஷ்ணகுமார் நவீன கிருமிநாசினி தெளிப்பு இயந்திரம் வடிவமைத்தார்.இதன் மூலம் மல்லாங்கிணர் அரசு மருத்துவமனை, பேரூராட்சி அலுவலகம், அங்கன்வாடி மையம், மின் வாரிய அலுவலகம், முக்கிய தெருக்களில் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் , எஸ்.ஐ., அசோக்குமார் முன்னிலையில் தெளித்தார்.

கட்டட பணிகளுக்கு பூமி பூஜை

சிவகாசி: கே.மடத்துப்பட்டியில் குடிநீர் தொட்டி, எட்டக்காபட்டியில் சேமிப்பு கிடங்கு,,
சேதுராமலிங்கபுரம்,விஜயகரிசல்குளத்தில் சமையல் அறை, பாரைப்பட்டி, செவல்பட்டி,கங்கர்செவல்பட்டியில் கலையரங்கம், அக்கரைப்பட்டியில் தரைமட்ட குடிநீர் தொட்டி உள்ளிட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. சாத்துார் எம்.எல்.ஏ., ராஜவர்மன் துவக்கி வைத்தார்.

ஆணையூர் ஊராட்சி கூட்டம்

சிவகாசி: சிவகாசி ஆணையூரில் ஊராட்சி உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் முத்துமாரி முன்னிலை வகித்தார். வளர்ச்சிப் பணிக்காக ரூ. 1.25கோடி ஒதுக்கீடு செய்த முதல்வர், துணை முதல்வர் , அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X