ரோடு அகலப்படுத்தும் பணி மின் கம்பங்களால் பாதிப்பு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 ரோடு அகலப்படுத்தும் பணி மின் கம்பங்களால் பாதிப்பு

உடுமலை:உடுமலை, ரயில்வே மேம்பாலத்திலிருந்து, நகராட்சி அலுவலகம் வழியாக அமைந்துள்ள ரோடு குறுகலாக உள்ளது. தளி ரோடு ரயில்வே மேம்பாலத்திலிருந்து, நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளுக்கு செல்லும் பிரதான வழித்தடமாக உள்ளதால், ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.மத்திய அரசின் 14 வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், நகராட்சி சார்பில், இந்த ரோட்டை அகலப்படுத்தி, மழை நீர் வடிகால் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த ரோட்டில், உள்ள மின் கம்பங்கள் அகற்றப்படாமல், ரோடு மற்றும் மழை நீர் வடிகால் அமைக்கப்படுவதால், ரோட்டின் மத்தியில், மின் கம்பங்கள் காணப்படுகிறது. வரும் வாகனங்கள் மின் கம்பத்தில் மோதி விபத்துக்கள் ஏற்படும் அபாயமும், ரோடு அகலப்படுத்தியும் பயனில்லாத நிலை உள்ளது.எனவே, ரோட்டிற்கு மத்தியிலுள்ள மின் கம்பங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X