சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வணிக நிறுவனங்கள் கடையடைப்பால் 'வெறிச்'

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 வணிக நிறுவனங்கள் கடையடைப்பால் 'வெறிச்'

சாத்தான்குளத்தில், வணிகர்கள் இறந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, பொள்ளாச்சி, உடுமலையில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.சாத்தான் குளத்தில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தந்தை, மகன் இருவரும், போலீஸ் ஸ்டேஷனில் இருந்த போது இறந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், உயிர் இழப்புக்கு நீதி கேட்கும் வகையிலும் மாநிலம் முழுவதும் நேற்று கடையடைப்பு அறிவிக்கப்பட்டது.
பொள்ளாச்சி தொழில்வர்த்தகசபை, சார்பு சங்கங்கள் மற்றும் பொள்ளாச்சி வட்டார சிறு வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் கடைகள் அடைப்பு அறிவிக்கப்பட்டு இருந்தன.இதனையடுத்து நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.பொள்ளாச்சி சத்திரம் வீதி, மார்க்கெட் ரோடு மற்றும் கடைவீதி, நகரத்தில் உள்ள மளிகை கடைகள், நகை கடைகள் மற்றும் துணிக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.மருந்து கடைகள் காலை, 10:00 மணி வரை அடைக்கப்பட்டன. பேக்கரி, காய்கறி கடைகள், சிறு தள்ளுவண்டி கடைகள் செயல்பட்டன.கிணத்துக்கடவுகிணத்துக்கடவு பகுதியில், மளிகை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. மற்ற கடைகள் வழக்கம் போல செயல்பட்டன.ஆனைமலைஆனைமலை, கோட்டூர் பகுதியில் உள்ள அனைத்து மளிகை கடைகள், வணிக நிறுவனங்கள் கடையடைப்பு செய்யப்பட்டன. இதனால், பொள்ளாச்சி ரோடு, போலீஸ் ஸ்டேஷன் ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டன.உடுமலை உடுமலையில், பெரும்பாலான கடைகள் நேற்று அடைக்கப்பட்டன.உடுமலை வியாபாரிகள் சங்கம் சார்பில், நேற்று ஒரு நாள் கடயைடைப்பு போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், உடுமலை நகரிலுள்ள மளிகை, ஜவுளி, நகைக்கடைகள், டீ கடைகள், பேக்கரிகள், வணிக நிறுவனங்கள் என பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், மக்கள் கூட்டம் காணப்படும், கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.பெதப்பம்பட்டிபெதப்பம்பட்டி வியாபாரிகள் சங்கம் சார்பில், நேற்று கடையடைப்பு செய்யப்பட்டது. சாத்தன்குளம் சம்பவத்தில், உயிரிழந்தவர்களுக்கு, பெதப்பம்பட்டி வியாபாரிகள் சங்க தலைவர் துரைசாமி தலைமையில் நிர்வாகிகள், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இதே போல், மடத்துக்குளம், எரிசனம்பட்டி, தேவனுார்புதுார் என கிராமங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.வால்பாறைவால்பாறை நகர், ரொட்டிக்கடை, சோலையாறு டேம், அட்டகட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் நேற்று அடைக்கப்பட்டன.வால்பாறை வட்ட வியபாரிகள் கூட்டமைப்பு சார்பில், இறந்த வியாபாரிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
- நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X