தீராத குடிநீர் பிரச்னை; இருள் சூழ்ந்த தெருக்கள்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 தீராத குடிநீர் பிரச்னை; இருள் சூழ்ந்த தெருக்கள்

தேவதானப்பட்டி:தேவதானப்பட்டி பேரூராட்சி 15 வது வார்டில் கம்பங்களில் எரியாத மின்விளக்குகளால் இரவில் தெருக்கள் இருள் சூழ்ந்துள்ளன. குடிநீர், கழிப்பிட வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இங்கு 15 வது வார்டில் மதுரை வீரன் கோயில் தெரு, கிழக்குத்தெரு, பொம்மிநாயக்கன்பட்டி செல்லும் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பேரூராட்சியில் வெளியேறும் கழிவுநீர் ஒன்று சேர்ந்து இங்கு குடியிருப்பு பகுதியில்கழிவுநீர் கால்வாயாக செல்வதால் துார்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. வாரம் ஒருமுறை குடிநீர் சப்ளையாகிறது.

தோட்டப்பகுதிகளுக்கு சென்று தேவையான குடிநீர் எடுத்து வருகின்றனர். தெருகம்பங்களில் மின்விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து மக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். துாய்மைப்பணியில் தொய்வு காரணமாக கழிவுநீர் கால்வாய் களின் நீர் தேங்கி நிற்கிறது. பன்றிகள் தடையின்றி உலா வருகிறது. பெண்கள் கழிப்பிடம் நீரின்றி பயனற்று சேதமடைந்துள்ளது. இப்பிரச்னைகளால் சிரமப்படும் மக்கள், பேரூராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

அவர்கள் கூறியதாவது:

அவதி

அய்யம்மாள்: தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. தினமும் தோட்டங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து பயன்படுத்துகிறோம். கேன்களில் நீரை விலைக்கு வாங்கு அவதிப்படுகிறோம். இப்பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழுது

பெருமாயி: பேரூராட்சி கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் செல்வதால் கொசு உற்பத்தி அதிகரித்து உள்ளது. கொசு கடித்து பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தெருவிளக்குகள் எரிவது இல்லை. இதனை சீரமைக்க வேண்டும். சிறிய குடிநீர் தொட்டி பழுது ஏற்பட்டுள்ளது.

சிரமம்

பாண்டிச்செல்வி: பல ஆண்டுகளாக இப்பகுதியில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படவில்லை. தேவையான குடிநீர் ஆதாரம் இருந்தும் வாரம் ஒரு முறையே சப்ளை செய்யப்படுகிறது. போதிய அளவு நீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X