பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் வாகன விற்பனை, பதிவு சரிவு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

சிவகங்கை:கொரோனா பாதிப்பால் வாகன விற்பனையில்சரிவு ஏற்பட்டுள்ளது. வாகனப்பதிவும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

தமிழகத்தில் ஏப்., 1 முதல் அனைத்து வாகனங்களும் பாரத் ஸ்டேஜ் 4 தரத்தில் இருந்து பாரத் ஸ்டேஜ் 6 என்ற தரத்திற்குமாற்றம் செய்யப்பட்டுள்ளது.கார்பரேட்டருக்கு பதிலாக சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வண்ணம் வாகன உற்பத்தியாளர்கள் வாகனங்களை நவீன முறையில் வடிவமைப்பு செய்து உற்பத்தி செய்கின்றனர்.இதனால் வாகனங்களின் விலை 20 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

வாகனங்களின் விலை அதிகரிப்பு காரணமாக விற்பனை 50 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மக்களின் கையில் பண சுழற்சியும் இல்லை. வாகன விலை உயர்வு, கொரோனாவால் பொருளாதாரம் பாதிப்பு போன்ற காரணங்களால் வாகன விற்பனை பெரிய சரிவைசந்தித்துள்ளது.வாகனங்கள் பதிவு செய்வதும் 50 முதல் 60 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது.

வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமார் தெரிவித்ததாவது:

கொரோனா பாதிப்பு காரணமாக வாகன விற்பனை சரிந்துள்ளது. கார் விற்பனை 20 சதவீதமாக உள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 70 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படும். தற்போது 30 முதல் 40 வாகனங்கள் மட்டுமே வாகனப்பதிவிற்கு வருகிறது.மக்கள் கையில் பணம் இல்லாததால் விற்பனை சரிவினை சந்தித்துள்ளது. ஊரடங்கு முடிந்த பின் மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பிய பின்னரே படிப்படியாக பாதிப்பிலிருந்து வாகன விற்பனை மீளும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X