பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் பொருள் இறக்க கூலி கொடுக்கும் கிராம மக்கள்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 ரேஷன் பொருள் இறக்க கூலி கொடுக்கும் கிராம மக்கள்

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகேயுள்ள காப்பாரப்பட்டியில் செயல்படும் பகுதிநேர ரேஷன்கடைக்கு பொருட்களை இறக்க கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் பணம் கொடுத்து வருகின்றனர்.

காப்பாரப்பட்டி தங்கம் கூறியது: சிங்கம்புணரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டடத்தில் கண்ணமங்களப்பட்டி ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. 2014ல் கண்ணமங்களப்பட்டி சுயஉதவிக்குழு கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. இந்த கடையில் கண்ணமங்களப்பட்டி, காப்பாரப்பட்டி, கோட்டைவேங்கைப்பட்டி உள்ளிட்ட 7 ஊர்களை சேர்ந்த 685 குடும்பகார்டு தாரர்கள் பொருட்கள் வாங்கினர்.

இதில் காப்பாரப்பட்டி, சூரம்பட்டி, கோட்டைவேங்கைப்பட்டி ஆகிய ஊர்கள் இங்குள்ள ரேஷன் கடையில் இருந்து 5 கி.மீ., துாரத்தில் உள்ளதால் பேருந்து போக்குவரத்தும் இல்லாததால் நடந்து வந்து பொருட்கள் வாங்க மக்கள் சிரமப்பட்டனர்.இந்நிலையில் 2015ல் சிறப்பு அனுமதியுடன் காப்பாரப்பட்டியில் செயல்படாத பள்ளிக்கட்டடத்தில் பகுதிநேர ரேஷன் கடை செயல்பட துவங்கியது.

அப்போது ரேஷன் கடைக்கான செலவுகளை ஊராட்சி நிர்வாகம் ஏற்பதாக கூறியது. சில காலம் கழித்து அந்த தொகையை ஊராட்சி வழங்காததால் ஐந்து ஆண்டுகளாக கடைக்கு வரும் பொருட்களை இறக்குவதற்கு கூலியாக கிராம மக்களிடம் குடும்ப அட்டைக்கு 10 ரூபாய் வீதம் மாதந்தோறும் விற்பனையாளர் மக்களிடம் வசூலிக்கிறார்.தற்போது ஊரடங்கால் பணம் கொடுக்க முடியாத நிலையில் மக்கள் உள்ளனர், என்றார்.

விற்பனையாளர் கண்ணன் கூறியது: 500 கார்டுகளுக்கு குறைவாக இருந்தால் தாய் கடையில் இருந்து பகுதிநேரக்கடையை பிரிக்க முடியாது. ஆனால் அப்போதைய ஊராட்சி தலைவர் காப்பாரப்பட்டிக்கு பகுதிநேரக்கடையை பழைய ஓட்டு பள்ளிக்கூடத்தில் செயல்படுத்தி உள்ளார். அங்கு இறக்கப்படும் பொருட்களுக்கு மக்கள் பணம் கொடுப்பதாக கூறியுள்ளனர். அவர்களால் வசூல் செய்து கொடுக்க முடியாததால் நானே அட்டைக்கு 10 ரூபாய் வீதம் கடந்த ஐந்து ஆண்டுகளாக வசூலித்து கொடுத்து வந்தேன்.

ஆனால் கடந்த மாதம் முதல் பணம் வாங்காமல் பொருட்கள் இறக்கப்பட்டு விநியோகிக்கப் பட்டு உள்ளது. இது சம்மந்தமாக கிராக மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X