பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறியவர்களுக்கு அபராதம் விதிப்பு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

கம்பம்:கம்பத்தில் ஊடங்கு அமல் தொடர்பாக திட்டஇயக்குநர் சிவக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) விஷ்ணுராம் மேத்தி, வேளாண் வணிகம் துணை இயக்குநர் ராபின்சன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சோதனை மேற் கொண்டனர்.

நகராட்சி கமிஷனர் கமலா, உழவர் சந்தை அதிகாரி கண்ணதாசன் உடன் சென்றனர். கமிஷனர் குடியிருப்பிற்கு முன்பாக காய்கறி கடையில் அதிக மக்கள் கூட்டம் முககவசம் அணியாமல் இருந்தது. விதிமீறியதற்காக கடைக்காரருக்கு ரூ,. 2 ஆயிரம், வேலப்பர் கோயில் வீதியில் பாத்திரக்கடை, நகை கடைகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

உழவர் சந்தை, நகராட்சி வீதி உள்ளிட்ட பல வீதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். முககவசம் அணியாமல் டூவீலரில் சென்றவர்கள்,வீதியில் இருந்தவர்கள் என 20 க்கும் மேற்பட்டவர் களிடம் நகராட்சி வருவாய் ஆய்வர் நாகராஜ் தலைமையில் தலா ரூ. 100 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X