தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அகலப்படுத்தாததால் விபத்து

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அகலப்படுத்தாததால் விபத்து

சிவகங்கை,:சிவகங்கையிலிருந்து-- மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அகலப்படுத்தாததால் விபத்து அபாயம் உள்ளது.

சிவகங்கையிலிருந்து மதுரை செல்லும் ேசிய நெடுஞ்சாலை இரு புறங்களிலும் சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது.சாலை அகலப்படுத்தும் பணியில் பாலங்கள் உள்ள பகுதியில் பாலங்களை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கைஎடுத்திருக்க வேண்டும். சாலைகளை அகலப்படுத்திய அளவிற்கு பாலங்கள் அகலப்படுத்தப்படாமல் உள்ளது.

சித்தலுார் விலக்கு அருகே சாலை அகலம் காரணமாக வாகனங்களில் வேகமாக வருவார்கள். அப்படி வரும் போது சாலை அளவிற்கு பாலம் விரிவாக்கம் இல்லாமல் குறுகலாக உள்ளது. வாகனங்கள் கவிழ்ந்து விபத்து அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் பள்ளம் தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர்.தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் அந்தப்பகுதியில் குறுகிய பாலம் உள்ளது என்ற எச்சரிக்கை பலகையாவது அமைக்க முன் வரவேண்டும். அப்பகுதியில் பாலத்தினை அகலப்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X