26 இடத்தில் கட்டுப்பாட்டு மண்டலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

26 இடத்தில் கட்டுப்பாட்டு மண்டலம்

Added : ஜூன் 27, 2020
Share

திருப்பூர்:கொரோனா தொற்று மீண்டும் மாவட்டத்துக்குள் பரவியுள்ளதால், 26 இடங்களில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.வெளிநாடு, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து திருப்பூர் வந்த நபர்கள் மூலம், மீண்டும் கொரோனா திரும்பியுள்ளது.தினமும் கொரோனா தொற்று பரவி வருவதால், நோய் தடுப்பு நடவடிக்கைக்காக, கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.திருப்பூர் மாநகராட்சியில், போயம்பாளையம், ஆண்டிபாளையம், வீரபாண்டி உட்பட எட்டு இடங்கள், பல்லடம் மற்றும் உடுமலையில், மூன்று இடங்கள், மூலனுார், காங்கயம், மங்கலம், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில், தலா ஒரு இடங்களில், கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அரை கி.மீ., சுற்றளவில் வசிக்கும் மக்கள், வெளியே சென்றுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியாட்கள் அங்கு வந்து செல்லவும் தடை உள்ளது. அப்பகுதியில் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை நடந்து கொண்டிருக்கிறது.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள, 22 ஆயிரம் குடும்பங்களுக்கும், காய்ச்சல் பரிசோதனை நடந்து வருகிறது. சித்தா பிரிவு மூலமாக, கபசுர குடிநீர் பொடியும் வழங்கப்படுகிறது. தொடர்பில் இருந்த அனைவருக்கும், கொரோனா பரிசோதனையும் நடக்கிறது.தினமும், 600 பேருக்கு திருப்பூரிலேயே பரிசோதனை நடந்து வருகிறது. அவசியமின்றி வெளியே வராமல், வீடுகளுக்குள் இருப்பதே நல்லது. வெளியே வந்து சென்றால், முக கவசம் அணிந்து, 'சானிடைசர்' மூலம் கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X