சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'இப்படியும் ஒரு பஸ்'; குழம்பிய பயணிகள்: திருப்பூரில் நடந்த கூத்து

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 'இப்படியும் ஒரு பஸ்'; குழம்பிய பயணிகள்: திருப்பூரில் நடந்த கூத்து

திருப்பூர்:முகப்பில் மஞ்சள், பக்கவாட்டில் பச்சை நிறம் என ஒரே பஸ்களில் இரு வேறு வண்ணத்தை பார்த்த, பொதுமக்கள் குழம்பி போயினர்.திருப்பூர் நகரில், நேற்று ஒரு வித்தியாசமான அரசு பஸ் (டி.என்., 33 என். 2792) தென்பட்டது. அது என்னவெனில், பஸ்சின் முன் மற்றும் பின், டவுன் பஸ் போல மஞ்சள் நிறமும், பக்கவாட்டில் சர்வீஸ் பஸ் போல பச்சை நிறமும் கொண்டிருந்தது.இதைப்பார்த்த மக்கள் சிலர், 'இது என்ன பஸ், டவுனா, சர்வீஸா?' என குழம்பினர். பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும் கூட, போக்குவரத்து கழக அதிகாரிகளின் அசட்டை செயலும் வெளிச்சத்துக்கு வந்தது.போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, அவர்கள் கூறுகையில், 'திருப்பூர், காங்கயம் ரோடு டிப்போ - 1ல் இருந்து இந்த பஸ் இயக்கப்படுகிறது. இதற்கு முன்பிருந்த டிப்போவில் பெயிண்ட் இப்படியே இருந்தது. அங்கிருந்து, வந்தபோது அப்படியே வந்து விட்டது, இங்கு மாற்று பேருந்துக்காக எடுத்து வரப்பட்டது' என்று அருமையாக சமாளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X