கேள்விக்குறி!லோயர்கேம்ப் தனிமை வார்டு பாதுகாப்பில்:பணியாளர்களுக்கு சானிடைசர் , கையுறை இல்லை| Dinamalar

தமிழ்நாடு

கேள்விக்குறி!லோயர்கேம்ப் தனிமை வார்டு பாதுகாப்பில்:பணியாளர்களுக்கு சானிடைசர் , கையுறை இல்லை

Added : ஜூன் 27, 2020
Share
 கேள்விக்குறி!லோயர்கேம்ப் தனிமை வார்டு பாதுகாப்பில்:பணியாளர்களுக்கு சானிடைசர் , கையுறை இல்லை

கூடலூர்: லோயர்கேம்ப் தனிமை வார்டில் சுகாதார பணியாளர்கள் கையுறை அணியாமலும், சானிடைசர் வைக்காமலும் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருவதால் அங்கு தனிமைப்படுத்த வருபவர்களின் கொரோனா தடுப்பு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

கேரளாவில் இருந்து 'இ பாஸ்' மூலம் குமுளி வழியாக தமிழகப்பகுதிக்கு வருபவர்கள் லோயர்கேம்பில் அமைக்கப்பட்டுள்ள தனிமை வார்டில் தங்க வைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு அங்கு சளி, எச்சில் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி அதற்கான முடிவுகள் வரும் வரை தங்கியிருக்க வேண்டும்.

இதில் கொரோனா தொற்று உறுதியானவர்களை தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனை மற்றும் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 'கோவிட் கேர்' சென்டருக்கு அனுப்பி வைக்கப்படுவர். தொற்று இல்லாதவர்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி அனுப்புகின்றனர்.


பாதுகாப்பில்லை

அதிகாலையில் வருபவர்களுக்கு எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள் மாலையிலும், பகல் மற்றும் மாலையில் எடுப்பவர்களுக்கு மறுநாள் காலையிலும் முடிவுகள் வரும். அதுவரை அங்கு தங்க வேண்டும்.

இவ்வாறு தங்குபவர்கள் பயன்படுத்தப்படும் கழிப்பறை அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது. இடம் திறந்த வெளியாக இருப்பதால் பாதுகாப்பில்லாமல் ஆங்காங்கே சுற்றித் திரிகின்றனர். இங்கு பணியில் இருக்கும் சுகாதாரத்துறையினர்கள் அனைவரும் கையுறை அணிவதில்லை. கை சுத்தப்படுத்த சானிடைசரும் பயன்படுத்துவதில்லை. இங்கு தங்கி சென்ற சிலருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

வார்டில்தங்கியிருப்பவர்கள் பலரும் கை குழந்தைகளுடன் வருகின்றனர். சுகாதாரத்துறை யினர் இவ்விஷயத்தில் மெத்தனம் காட்டுவதால் மேலும் பலருக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது.எனவே இதில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரத்துறையினரிடம் கேட்டபோது, இங்கு சானிடைசர் இருப்பு இல்லை,'என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X