குறைந்தழுத்த மின்சாரம் மருதிப்பட்டி மக்கள் அவதி

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டியில் ஒரு வருடமாக குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுவதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்: மருதிப்பட்டியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். ஊரில் மூன்று டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன.இதில் மயானத்தின் அருகில் இருக்கும் டிரான்ஸ்பார்மரிலிருந்து கடந்த ஒரு வருடமாக குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த இணைப்பில் சுமார் 150 குடும்பங்கள் பயன்பெறுகின்றனர்.

வெயிலில் தாக்கம் அதிகரிப்பால் வயதானவர்கள்,சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி அடிக்கடி மின் தடையும் ஏற்படுகிறது. குறைந்த மின் அழுத்தத்தால் மின்விசிறிகள்இயங்காததால் இரவு நேரங்களில் துாக்கமின்றி பலர் தவித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X