பொது செய்தி

தமிழ்நாடு

கீழடியில் மழை: அகழாய்வு பணி நிறுத்தம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 கீழடியில் மழை: அகழாய்வு பணி நிறுத்தம்

திருப்புவனம்:கீழடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக அகழாய்வு பணி நிறுத்தப்பட்டன.

கீழடி, அகரம், கொந்தகை, மணலுார் உள்ளிட்ட பகுதிகளில் 6ம் கட்ட அகழாய்வு நடந்து வருகின்றன. தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம், மதுரை மாவட்ட உதவி இயக்குனர் சக்திவேல், தொல்லியல் அலுவலர்கள் ஆசைத்தம்பி, பாஸ்கரன் தலைமையில் 70க்கும் மேற்பட்ட பணியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்புவனம் வட்டாரத்தில் இரு நாட்களாக பெய்த மழை காரணமாக அகழாய்வு குழிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் குழிகளில் மண் சரிந்து விட்டதால் நேற்று முழுவதும் தொழிலாளர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அகழாய்வு பணி நடைபெறவில்லை. இன்று முதல் மீண்டும் பணிகள் தொடங்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X