பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் பணியால் போலீசாருக்கு மன அழுத்தம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

போடி:போடி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் தாய், மகள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு நபருக்கு கொரோனா உறுதியானது. அவர் மூலம் அந்த வழக்கை விசாரித்த எஸ்.ஐ., உட்பட 13 போலீசார் அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதனால் அவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.

ஸ்டேஷன் சீல் வைக்கப்பட்டு வேறு இடத்தில் இயங்குகிறது.தற்போது 17 போலீசார் மட்டுமே உள்ளனர். ஊரடங்கில் 2 வாரம் தொடர்ந்து பணியாற்றும் போலீசாருக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இங்கு பற்றாக்குறையால் மற்றவர்களுக்கு விடுப்பு அளிக்கப்படவில்லை. வாகன சோதனை, ரோந்து என ஓய்வின்றி இரவு, பகலாக தொடர்ந்து பணிபுரிவதால் போலீசார் மன அழுத்தம் அடைந்துள்ளனர். இதில் தேனி எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X