சக்குடியில் நுழைய கால்நடைகளுக்கு தடை

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திருப்புவனம்:திருப்புவனம் பகுதி கால்நடை வளர்ப்போர் மதுரை மாவட்ட சக்குடி கால்நடை மருத்துவமனைக்கு வர திடீரென தடை விதிக்கப்பட்டதால் கால்நடை வளர்ப்போர் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

திருப்புவனம் வட்டாரத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கொந்தகை, அல்லிநகரம், பூவந்தி, கல்லுாரணி, பழையனுார் ஆகிய இடங்களில் கால்நடை மருந்தகங்கள் இயங்கி வருகின்றன. திருப்புவனம் அருகே உள்ள தட்டான்குளம், கழுகேர்கடை, மணலுார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள் அருகில் உள்ள மதுரை மாவட்ட சக்குடி கால்நடை மருந்தகத்தில் இதுவரை கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

ஆனால் திடீரென சக்குடி கால்நடை மருந்தகத்தில் தட்டான்குளம், கழுகேர்கடை,மணலுார் பகுதி கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க மறுத்துவிட்டனர். இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் வாடகை வாகனம் பிடித்து திருப்புவனத்திற்கு கால்நடைகளை சிகிச்சைக்காக கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

கால்நடை வளர்ப்போர் கூறுகையில், தட்டான்குளம், கழுகேர்கடை பகுதிகளில் 300 கறவை மாடுகளும், ஆயிரத்து 350 ஆடுகளும், 2ஆயிரத்து 500 கோழிகளும், 150 நாய்களும் உள்ளன. இவற்றிற்கு இதுவரை சிகிச்சையளித்து வந்த சக்குடி கால்நடை மருத்துவர்கள் தற்போது சிகிச்சையளிக்க முடியாது என திருப்பியனுப்புகின்றனர்.

நாங்கள் வெகு தொலைவிற்கு கால்நடைகளை சிகிச்சைக்காக நடத்தியே அழைத்து செல்ல வேண்டியுள்ளது. வாடகை வாகனங்களில் கொண்டு செல்ல பல்வேறு கட்டுப்பாடு இருப்பதால் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X