பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வு ஆன்லைன் பயிற்சி 170 மாணவர்கள் பங்கேற்பு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

தேனி,:தேனி மாவட்டத்தில் 'நீட்' தேர்வு 'ஆன்லைன்' பயிற்சியில் அரசு பள்ளி மாணவர்கள் 170 பங்கேற்று வருகின்றனர்.

மருத்துவ படிப்புகளில் சேர 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால் இம்மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது.

தமிழக கல்வி துறை 'நீட்' தேர்வில் பங்கேற்கும் அரசு,உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு 'ஆன்லைனில்' நீட் பயிற்சி வகுப்பு நடத்துகிறது. இ-பாக்ஸ் என்ற இணைய தளத்தில் பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்கலாம். இதில் மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 769 பேர் பங்கேற்கின்றனர்.

தேனி மாவட்டத்தில் 'நீட்' 'ஆன்லைன்' வகுப்பில் 170 பேர் பங்கேற்கின்றனர். இவர்கள் வீடுகளில் தினமும் முறையாக பயிற்சியில் பங்கேற்கிறார்களா, அப்போது இணைய தளவசதி குறைபாடு உள்ளதா என கண்டறிந்து மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வழங்க முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுபாணி ஆலோசனையில், தலைமை ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கண்காணித்து அறிக்கை வழங்குகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X