2 லட்சத்து 9 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி இலக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2 லட்சத்து 9 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி இலக்கு

Added : ஜூன் 27, 2020
Share

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் 2 லட்சத்து 9 ஆயிரம் மெட்ரிக் டன்உணவு தானியங்கள் உற்பத்திக்கு வேளாண்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

மாவட்டத்தில் 70 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யவும், 4,500 எக்டேர் சிறுதானியப் பயிர்களும், 2 ஆயிரம்எக்டேரில் பயறு வகைகளும், மொத்தம் 76 ஆயிரத்து 500 எக்டேர் பகுதியில் உணவு தானிய பயிர்கள் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு தேவையான சான்று பெற்ற நெல் விதைகள், 452 மெட்ரிக் டன், பயறு வகை விதைகள் 9 மெட்ரிக் டன்னும், சிறுதானிய பயிர் விதைகள் 9 ஆயிரம் மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்து விதைகள் 5 மெட்ரிக் டன்னும் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கோடை மழையை பயன்படுத்தி விவசாயிகள் உழவு செய்திடவும், நெல் நடவு முறையில் சாகுபடி செய்யவும், பசுந்தாள் உரங்களை விதைத்து பயன் பெறலாம். நெல், பயறு, நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் உயிர் உர விதை நேர்த்தி செய்து ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைக்கலாம், என வேளாண் இணை இயக்குநர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X