பொது செய்தி

தமிழ்நாடு

கோடை மழை இந்த ஆண்டும் குறைவு தென்மேற்கு பருவமழை கை கொடுக்குமா

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

தேனி:தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டும் கோடை மழை குறைந்தது. தென்மேற்கு பருவமழை கை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் ஆண்டு தோறும் கோடை சாகுபடி விவசாயிகளுக்கு கைகொடுக்கும். ஒருசில ஆண்டுகளாக கோடையில் பெய்யும் 222.07 மி.மீ, இயல்பு மழை குறைவதால், சாகுபடி பாதிக்கப்பட்டு பல ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசாகி விடுகின்றன. அதனால் குடிநீர் தட்டுப்பாடு, கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர்.

இந்த ஆண்டு மார்ச் 19.43,ஏப்.,57.05, மே., 62.01 மி.மீ. என மொத்தம் 138.49 மி.மீ., மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 83.58 மி.மீ., கடந்த ஆண்டைவிட 36.85 மி.மீ. குறைவாகும். இரு ஆண்டாக கோடையில் தேனிக்கு இயல்பு மழை பெறவில்லை.


சாகுபடி பரப்பளவு



குறைந்த மழையை பயன்படுத்தி 407 எக்டேரில் நெல், 104 எக்டேரில் சிறுதானியம், 437 எக்டேரில் பயறு வகைகள், 401 எக்டேரில் எண்ணெய் வித்துக்கள் என மொத்தம் ஆயிரத்து 349எக்டேரில் சாகுபடியானது. கேரளாவில் பெய்துவரும் தென்மேற்கு பருவமழை கடந்தவாரம் தேனியில் சாரலாகவே பெய்தது. வரும் வாரங்களில் அது வலுத்து கைகொடுக்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


மழையளவு(மி.மீ.,)

நேற்று காலை 8:30 மணிப்படி மாவட்டத்தில் மழையளவு :ஆண்டிபட்டி-5.8 , அரண்மனைப்புதுார் -5.8, போடி -4.6, கூடலுார் -2.8, மஞ்சளாறு-14, பெரியகுளம்- 18.8, தேக்கடி -0.6, சோத்துப்பாறை -6, வைகை அணை-6.8, வீரபாண்டி 8. மொத்தம் 73.20.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X