பொது செய்தி

தமிழ்நாடு

'பனை விதை தாமத நடவு முளைப்பு திறன் பாதிக்கும்':விவசாயிகள் ஆதங்கம்!

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

பொங்கலுார்:காலம் கடந்து பனை விதை நடுவதால், அவை முளைப்பு திறனை இழந்து விடுவதாக, விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர்.ஆண்டுதோறும் பனை பாதுகாப்பு இயக்கம் மற்றும் தன்னார்வலர்கள், சமூக அமைப்புகள் சார்பில் லட்சக்கணக்கான பனை விதைகள் நடவு செய்யப்படுகின்றன. ஆனால், நடவு செய்யப்படும் பனை விதையில் ஐந்து சதவிகிதம் கூட முளைப்பதில்லை.பனை விதை நடவு செய்ய காட்டும் ஆர்வத்தில் ஒரு சதவிகிதம் கூட விதை தேர்வில் காட்டுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. காலம் கடந்து நடவு செய்யப்படும் பனை விதையில் பெரும்பகுதி ஏற்கனவே முளைத்து கருகி போய் விடும்.தற்போது பனம் பழ சீசன் துவங்கியுள்ளது. பனம் பழம் மரத்தில் இருந்து கீழே விழுந்த ஒரு வாரத்திற்குள் நடவு செய்தால், 99 சதவிகிதம் முளைப்பு திறன் இருக்கும். எனவே, பனை விதை நடவு செய்ய ஆர்வமுள்ளவர்கள் தற்போதிருந்தே பனை நடவு செய்வதை துவக்கலாம். இதன் மூலம் அவர்களுடைய உழைப்பு வீணாகாமல் நடவு செய்த அனைத்து விதைகளும் முளைத்து மரமாகும் வாய்ப்பு ஏற்படும், என விவசாயிகள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X