பொது செய்தி

தமிழ்நாடு

'சம்பா' சாகுபடி; 30 ஆயிரம் டன் விதை நெல் உற்பத்தி

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:காவிரி டெல்டா பகுதி சம்பா சாகுபடிக்காக, தாராபுரத்தில், 30 ஆயிரம் மெட்ரிக் டன் விதை நெல் தயாராகி வருவதாக, விதைச்சான்று துறை தெரிவித்துள்ளது.காவிரி டெல்டா பகுதி நெல் சாகுபடிக்கு தேவையான, விதை நெல் தாராபுரம் சுற்றுப்பகுதியில் விளைவிக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து, காவிரி டெல்டா குறுவை சாகுபடிக்கு, 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தேவையான, குறுவை சாகுபடி விதை நெல், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.எதிர்வரும் சம்பா பருவ சாகுபடிக்கு தேவையான, குறுகியகால மற்றும் நீண்டகால விதை ரகங்களான, ஐ.ஆர்., -20, ஏ.டி.டி., -38, ஏ.டி.டி., -39, ஏ.டி.டி., (ஆர்) -46 மற்றும் சி.ஆர். 1009 ஆகிய ரகங்கள், சுத்திகரிப்பு செய்து, விதை வினியோகத்துக்கு தயாராகி வருகின்றன.காவிரி டெல்டா பகுதி சம்பா சாகுபடிக்கு, 30 ஆயிரம் மெட்ரிக் டன் வயல்மட்ட விதை குவியல் தயாராக இருக்கிறது. இம்மாத இறுதிக்குள், சுத்திகரிப்பு பணி முடிந்து, 15 ஆயிரம் மெட்ரிக் டன் விதைகள், சான்று அட்டைகளுடன் சிப்பமிடப்பட உள்ளன.இந்நிலையில், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இணை இயக்குனர் ராஜேந்திரன், துணை இயக்குனர் மாரிமுத்து ஆகியோர், தாராபுரத்தில் அமைந்துள்ள, விதை சுத்தி நிலையங்களை ஆய்வு செய்தனர். காலதாமதமின்றி, சுத்திகரிப்பு பணியை முடித்து, விதைநெல் வினியோகத்துக்கு தயாராக வேண்டுமென அறிவுறுத்தினர்.இதுகுறித்து இணை இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது:தமிழகத்திற்கு தேவையான விதைநெல், பெரும்பாலும் தாராபுரம் பகுதியில் உற்பத்தியாகிறது. சம்பா சாகுபடிக்கு, 30 ஆயிரம் மெட்ரிக் டன் விதைநெல் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இம்மாத இறுதியில் இருந்து, விதைநெல் வினியோகம் துவங்க இருக்கிறது.விதைச்சான்று சட்டம், 1966ன்படி, மூட்டையை பிரிக்காமல், விதை நெல் விற்கப்பட வேண்டும். வழக்கமாக, 30 கிலோ மூட்டைகளில், விதைநெல் விற்கப்படும்.சிறு, குறு விவசாயிகள் வசதிக்காக, 10 கிலோ பைகளிலும், சான்று அட்டைகளுடன் சிப்பமிட உத்தரவிட்டுள்ளது. முதன்முதலாக, தாராபுரத்தில், துணி பைகள் மூலம், 10 கிலோ சிப்பங்கள் தயாராகிவருகின்றன,இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X