தமிழ்நாடு

கட்டாயம் டூ தலைநகர் தூங்கா நகர் போல் சீமைக்கும் ஊரடங்கு: அதிகரிக்கும் கொரோனா தொற்று கட்டுப்படுமா

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் இது வரை 323 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் தலைநகர் தூங்கா நகர் போன்று சிவகங்கையிலும் 15 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்.

டில்லி, மும்பையில் இருந்து வந்தவர்களை தொடர்ந்து, சென்னையில் இருந்து வந்தவர்கள் மூலம் சிவகங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து விட்டது. ஒரு குடும்பத்தில் ஒருவர் தொற்றுடன் வந்தால், அக்குடும்ப உறுப்பினர்களுக்கு, சமூக பரவல் போல் தொற்றிக் கொள்வது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அரசு வெளியிடும் தகவல் பட்டியலில் சிவகங்கையில் 130 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று, டிஸ்சார்ஜ் 71, இறப்பு 1 என குறிப்பிட்டுள்ளனர்.


323 ஆக தொற்று அதிகரிப்பு

ஆனால், நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரிப்பதால், நேற்று மாலை 4:00 மணி நிலவரப் படி சுகாதாரத்துறை கணக்கெடுப்புபடி, 12 ஆயிரத்து 265 பேருக்கு பரிசோதனை செய்ததில், 323 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரிய வந்துள்ளது.

இறப்பு கணக்கு ஒன்றாக இருந்தாலும், கணக்கில் வராமல் 4 பேர் வரை தொற்றுடன் இறந்துள்ளனர். இதனால் சிவகங்கை மக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர். இதற்கு முழு ஊரடங்கே தீர்வு என சுகாதாரத்துறையினர் வலியுறுத்துகின்றனர்.


முழு ஊரடங்கு அவசியம்



இவற்றை கட்டுக்குள் கொண்டு வர தலைநகர்(சென்னை), துாங்காநகர் (மதுரை) போன்று சிவகங்கையிலும் ஜூலை 15 வரை முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கை கண்காணிப்பு அலுவலர் மகேசன் காசிராஜன், கலெக்டர் ஜெயகாந்தன் ஆகியோர் ஆலோசனை செய்து, அரசிடம் வலியுறுத்தி முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X