பொது செய்தி

தமிழ்நாடு

எல்லை 'மீறும்' மக்கள்; சுகாதார துறை எச்சரிக்கை

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 எல்லை 'மீறும்' மக்கள்;  சுகாதார துறை எச்சரிக்கை

வெள்ளகோவில்:கரூரில் இருந்து, திருப்பூர் மாவட்ட எல்லைக்கு பலரும் நடந்து செல்கின்றனர். இதனால், தொற்று பாதிக்கும் அபாயம் அதிகரிக்கும் என, சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.பஸ்கள் மாவட்ட எல்லைக்குள் மட்டுமே இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், மாவட்ட எல்லைகளை நடந்தே சிலர் கடக்கின்றனர். அவ்வகையில், கரூர் மாவட்ட எல்லையான, வைரமடையில் இருந்து, திருப்பூர் மாவட்ட எல்லைப்பகுதியான ஜெயம் மெட்ரிக் பள்ளி செக்போஸ்ட் வழியே பலர் நடந்து வெள்ளகோவில் வருகின்றனர்.இவ்வாறு, நேற்று காலை முதல் ஏறத்தாழ, 200க்கும் மேற்பட்டோர் நடந்தே வெள்ளகோவிலுக்குள் வந்தனர். மாலை, 6:00 மணியளவில், குளித்தலையில் இருந்து, 15 பேர், நடந்தே செக்போஸ்டை கடந்தனர்.அதன்பின், திருப்பூருக்கு பஸ்ஸில் சென்று விடுகின்றனர். குழந்தை முதல் முதியோர் வரை நடந்து வருவதால், காய்ச்சல் உள்ளதா, என சுகாதார துறையினர் காய்ச்சல் பரிசோதித்து அனுப்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X