ஆத்துாரில் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் தொய்வு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 ஆத்துாரில் கட்டுப்பாட்டு  நடவடிக்கையில் தொய்வு

சின்னாளபட்டி:ஆத்துார், சின்னாளபட்டியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தலில் தொய்வு நிலவுகிறது.

ஆத்துாரைச் சேர்ந்த 48 வயது சுகாதாரத்துறை டிரைவருக்கு, நேற்று முன்தினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. முடிவுகள் வெளியாகி பல மணிநேரமாகியும், அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் அலட்சியம் காட்டினர். நேற்று மாலைவரை சம்பந்தப்பட்ட தெருவில் தடுப்புகள் அமைக்கப்படவில்லை.

டீக்கடை, ஓட்டல், வணிக நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கின.சின்னாளபட்டி பாரதி நகர் தொற்று பாதிப்பு பகுதியில், பிளீச்சிங் பவுடர் மட்டுமே தெளித்தனர். நேற்று மாலை வரை தடுப்பு அமைக்கவில்லை. ஜீவா நகரில் பல மணி நேரத்திற்குப்பின், முழுமையாக மூடப்படாத தடுப்புகளை பெயரளவில் அமைத்திருந்தனர்.

கண்காணிப்பு பணியில் எந்தத் துறையினரும் ஈடுபடவில்லை. பலர் தடுப்புகளின் பக்கவாட்டு பகுதி வழியே நுழைந்து சென்றனர். செலவை சமாளிப்பது, தொடர்ந்து பணியில் ஈடுபடுவது போன்ற காரணங்களால் அரசு துறையினர்அலட்சியம் காட்டுவதாக புகார் நீடிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X