பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.5 கோடி கூடுதல் கடன் வழங்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:சிறு, குறு நிறுவனங்களுக்கான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால், ஐந்து கோடி ரூபாய் கூடுதல் கடன் வழங்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவர, மாவட்டத்தில், 2,881 பேருக்கு, 432 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான உச்சவரம்பு, 100 கோடி ரூபாயை, 250 கோடியாக உயர்த்தியுள்ளது.கூடுதல் கடன், 25 கோடி ரூபாய் வரையிலான நிலுவைக்கு மட்டுமே கிடைக்கிறது. உச்சவரம்பு அதிகரித்துள்ளதால், அதிக நிலுவை இருந்தாலும், ஐந்து கோடி ரூபாய் கூடுதல் கடன் வழங்க வேண்டுமென, தொழில்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொது செயலாளர் விஜயகுமார் கூறியதாவது:கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, கலந்தாய்வு கூட்டத்தில், அதிக கடன் வைத்துள்ள நிறுவனங்களுக்கும், ஐந்து கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டும். அடமான கடன் பத்திர பதிவுக்கு, 35 ஆயிரம் ரூபாய் வரை செலவாவதால், கொரோனா நேரத்தில் மட்டும் விலக்கு அளிக்க வேண்டும்.கடன் தவணை மற்றும் வட்டி, 89 நாட்கள் செலுத்தாத நிறுவனங்களுக்கும் வழங்க வேண்டும். 'இ-பாஸ்' நடைமுறையை எளிதாக்க வேண்டுமென வலியுறுத்தினோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X