கொசு மருந்து அடிக்கலாமே

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திருப்பூர், லட்சுமி நகர் பகுதியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கொசு மருந்து அடிக்க வேண்டும்.- ராஜேஷ், லட்சுமி நகர்.நீர் வழிப்பாதை துார்வாரலாமேபல்லடம், பனிக்கம்பட்டியில் உள்ள எலந்த குட்டைக்கு வரக் கூடிய நீர் வழிப்பாதை புதர் மண்டி கிடக்கிறது. துார்வர வேண்டும்.- சாமிநாதன், பல்லடம்.அடிப்படை வசதி செய்யலாமேதிருப்பூர், டி.டி.பி., மில், நடராஜ் லே ---அவுட் 4வது வீதியில் ரோடு, சாக்கடை கால்வாய் வசதியில்லை. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மழைக்காலங்களில், தண்ணீர் ரோடுகளில் தேங்கி நிற்கிறது.- கல்யாணி, டி.டி.பி., மில்.தெருவிளக்கு சீரமைக்கலாமேதிருப்பூர், பலவஞ்சிபாளையம், பூங்கா நகரில் தெருவிளக்கு எரிவதில்லை. இரவு நேரத்தில் வெளியில் மக்கள் நடமாட சிரமமாக உள்ளது.- நடராஜ், பலவஞ்சிபாளையம்.உடைப்பை அடைக்கலாமேதிருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது.- ரவி, பாளையக்காடு.குடிநீர் சப்ளை செய்யலாமேதிருப்பூர், வாலிபாளையம், யூனியன் மில் ரோடு, முள்ளுக்காடு ஆகிய பகுதிகளில் குடிநீர் சீராக வருவதில்லை. தண்ணீருக்காக மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.- லட்சுமி, வாலிபாளையம்.விதிமீறும் வாகனங்கள்திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்ட் காமராஜர் ரோட்டில் வாகன ஓட்டிகள் ஒருவழிப்பாதையில், சாலை விதிமுறைகளை மதிக்காமல் ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர். போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டும்.- ராஜன், கருவம்பாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X